NFPE

Thursday 25 May 2017

கேடர் சீரமைப்பு பிரச்சினைகள் குறித்து மீண்டும் CPMG அவர்களுடன் சந்திப்பு

 அன்புத்தோழர்களுக்கு வணக்கம். 

கடந்த 23.5.17 தேதியிட்டு நேற்றைய தினம் வெளியிடப்பட்ட மொத்தம் 1687 ஊழியர்களுக்கு கேடர் சீரமைப்பின்விளைவாக அளிக்கப்பட்ட LSG பதவி உயர்வுப் பட்டியலும், அதேபோல 22 ஊழியர்களுக்கு பணி மூப்பின் அடிப்படையில் அளிக்கப்பட HSG II பதவி உயர்வுப் பட்டியலும் இன்றைய தேதியில் வெளியிடப் பட்ட பணி மூப்பின் அடிப்படையிலான மூன்று ஊழியர் களுக்கான HSG I பதவி உயர்வுப் பட்டியலும் மாநிலச் சங்கம் உங்கள் அனைவருக்கும் முக நூல் மற்றும் WHATSAPP இல் அனுப்பியிருந்தது. அனைவரும் செய்தி அறிந்திருப்பீர்கள்.  

கேடர் சீரமைப்பு உத்திரவு அமல் படுத்துதலில் இலாக்கா அளவில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்து எந்தவித முன்னேற்றமும் இல்லாத சூழலில், 

மாநில அளவில் CPMG அவர்களின் அதிகார எல்லைக்குள் உள்ள விஷயங்களில் மாற்றங்கள் செய்து கொடுக்க வேண்டி கடந்த 15.5.2017 அன்று அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல் பெற்று பிரச்சினைகளைப் பேசி தொடர்ந்து 18 பிரச்சினைகளை பட்டியலிட்டு்  நம் மாநிலச் சங்கம் கடிதம் அளித்ததும் அதில் அளிக்கப்பட உறுதி மொழி குறித்தும் ஏற்கனவே உங்களுக்கு தெரிவித்திருந்தோம்.

தற்போது பதவிஉயர்வுப் பட்டியல் வெளி வந்த நிலையில் பல கோட்டங்களில் இருந்து நிர்வாகிகள் தொலைபேசியில் விடாமல் தொடர்பு கொண்ட நிலையில் மீண்டும் இன்று (25.5.2017)  CPMG  அவர்களை சந்தித்து கடிதம் அளித்து பேசினோம். அந்த கடிதத்தின் நகல் கீழே காண்க. 

கடந்த நேர்காணலை விட தற்போது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் விபரம் கீழேகாணலாம் .

1. பதவி உயர்வு ஏற்க இயலாத ஊழியர்களின் DECLINATION ஏற்கப்பட உரிய வழிகாட்டு உத்திரவு வழங்கப்படும்.

2. POSTING என்பது கூடுமானவரை அந்தந்த கோட்டங்கள் அல்லது UNIT அலுவலகங் களிலேயே அளிக்க அறிவுறுத்தப்படும். மேலும் POSTING போடுவதற்கு முன்னர் பதவி உயர்வுப் பட்டியலில் உள்ளவர்களிடம் விருப்பம் பெற்று அதில் SENIORITY அடிப்படையில் கேட்கும் இடங்களுக்குமுன்னுரிமை வழங்கப்படும்.

3. சென்னை பெருநகரத்தை பொறுத்தவரையில் GPO, ANNA ROAD, FOREIGN POST, CENTRAL DIVISION உள்ளிட்ட கோட்டங்கள்/UNIT அலுவகங்களில் மிகக் குறைவான எண்ணிக்கையில் LSG பதவிகள் அடையாளம் காட்டப்படிருப்பது அடிப்படை விதிகளுக்கு முரணானது என்று சுட்டிக் காட்டினோம். ஏற்கனவே நிலுவையில் உள்ள அடையாளம் காணப்படாத LSG மற்றும் HSG பதவிகளை  சென்னை பெருநகர அலுவலகங்களில் அடையாளப்படுத்திட வேண்டினோம்.

( நம்முடைய கடிதத்தில் இது குறித்து விரிவாக தெரிவித்திருக்கிறோம்). 

இதனை ஏற்றுக் கொண்டு இதன் மீது உடனடியாக பரிசீலனை செய்து பதவிகளை அதிகப் படுத்திட APMG அவர்களிடம் கோப்புக் குறிப்பு வைக்குமாறு CPMG  அவர்கள் அறிவுறுத்தினார்.  

4. இதே போல ACCOUNTS LINE க்கும் LSG, HSG பதவிகள் அடையாளப்படுத்திட வேண்டினோம். DTE க்கு ஏற்கனவே இது குறித்து கடிதம்  எழுதியிருப் பதாகவும், அதற்கான  ஒப்புதல் வந்தவுடன் இதன் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். ஆனால் மீதி இருக்கும் பதவிகள் சென்னை பெருநகர கோட்டங்களுக்கு அடையாள படுத்தப்பட்டால் பின்னர் ACCOUNTS LINE க்கான பதவிகள் மீதம் இருக்காது என்ற காரணத்தால் , தற்போது எல்லா TREASURY பதவிகளையும் உயர் பதவியாக அடையாள படுத்தியிருப்பதை மாற்றி அமைக்கலாம் என்றும் அவ்வாறு செய்தால் எல்லா விதத்திலும் அது பிரச்சினையை தீர்க்க உதவும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

5. தற்போது 1.4.88 முன்னதான மற்றும்  4.11.92 வரைக்குமான பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு  அதில் மொத்தம் 1687 ஊழியர்களுக்கு  மட்டுமே LSG பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 1280 பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும் (இதில் ஏற்கனவே LSG பதவியில் உள்ள சுமார் 450 ஊழியர்கள் போக மீதம் சுமார் 830 பதவிகள் )  எடுத்துக் கூறினோம். 

எனவே உடனடியாக 4.11.92 க்கு பின்னதான, 1.4.2017 வரை  ஐந்து ஆண்டு சேவை முடித்த அனைத்து ஊழியர்களின் பணி மூப்பு பட்டியல் வெளியிடப்படவேண்டும் என்றும், அதன் அடிப்படையில்  தற்போது DECLINE செய்திடும் ஊழியர்களுக்கு ஈடான எண்ணிக்கையில் மேலும் பதவிகள் நிரப்பப்பட வேண்டும் என்றும், அது இளைய ஊழியர்களுக்கு உடனடி வாய்ப்பை வழங்கிடும் என்றும் வலியுறுத்தினோம். 

இப்படி செய்தால் அநேகமாக எல்லா பதவிகளுமே நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஏற்கனவே LSG இல் உள்ள ஊழியர்கள்  HSG பதவிகளில் OFFICIATE செய்திட முடியும் என்றும்  தெரிவித்தோம். 

இதனை CPMG அவர்கள் ஏற்றுக்கொண்டார். இன்னும்  15 நாட்களுக்குள் அடுத்த பணி மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டு, விரைவில் அடுத்த பதவி உயர்வுப் பட்டியலும் வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார்.

6. அதிகப் பணப் பரிவர்த்தனை உள்ள BPC மற்றும் சென்னை GPO CHEQUE CLEARING GRID ஆகியவற்றுக்கு அதன் நிலைக்கேற்ப உயர் பதவிகள் அடையாளப்படுத்திட ஒப்புக் கொண்டார்.

7. NFG பதவி உயர்வு உடனடியாக வெளியிடப்பட வேண்டும் என்றும் அதில் பதவிகள் அடையாளப்படுத்தப் படக்கூடாது என்றும் வலியுறுத்தினோம். இதனையும் உடன் செய்வதாக ஒப்புக் கொண்டார். 

8.  எழுத்தரில் காலிப்பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிலுவையில் உள்ள விதி 38ன் கீழான மாறுதல் உடன் அமல் படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். இதர பிரச்சினைகள் குறித்தும் உடன் பரிசீலித்து உரிய சாதகமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். 

ஊழியர்கள் பாதிக்காத வகையில் நிச்சயம் எந்தவித உதவியும் செய்திட தான் தயாராக உள்ளதாகவும் ஊழியர்கள் எவரும்  கவலை கொள்ள வேண்டாம் என்றும் உறுதியினை நம்முடைய CPMG அவர்கள் தெரிவித்தார். அவர் அளித்த உறுதிமொழி நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம். CPMG அவர்களுக்கும் APMG STAFF அவர்களுக்கும் நம் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பிரச்சினைகள் குறித்து ஆரம்ப காலம் தொட்டு நம்முடைய சங்கம் எடுத்து வரும் முயற்சிகள், கடிதங்கள் , ஊழியர் தரப்பு பேச்சு வார்த்தைகள், மீண்டும் மீண்டும் பேச்சு வார்த்தைகள் என நாம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு வருகிறோம்.

இந்த பிரச்சினை குறித்து  எட்டு ஆண்டுகளாக எதிலும் ஈடுபடாத, எந்த முயற்சியும் செய்திடாத சில LETTER PAD-கள், கதவுக்கு வெளியில் நின்று காதில் வாங்கிய செய்திகளை ஊழியர் மத்தியில் பரப்பி, தாங்கள் செய்ததாக விளம்பரப் படுத்திக் கொள்வதை நம்முடைய  தோழர்கள் பலர் வேதனையுடன் நமக்குத் தெரிவித்தார்கள். என்ன செய்வது? இது இன்று நடப்பதல்ல . காலம் காலமாக வேறு சிலர் செய்து வந்ததை இன்று  இந்த LETTER PAD-கள் செய்கிறார்கள். இவற்றை நம்முடைய தோழர்கள் ஒதுக்கித் தள்ளி, ஊழியர் பிரச்சனைகளை தீர்ப்பதில் முனைவு காட்டிட வேண்டுகிறோம். 

எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.  சிறிய பிரச்சினை முதல் மிகப் பெரிய பிரச்சினைகள் வரை களம் அமைத்து நித்தம் நித்தம் போராடும் சங்கம் எது என்பது சாதாரணப் பார்வையாளர்களாக உள்ள ஊழியர்கள் உணர்ந்ததால்தான் என்றும் நம்முடைய NFPE பேரியக்கம் ஆல விருட்சமாக  உயர்ந்தோங்கி நிற்கின்றது. 

ஊழியர் நலன் காப்போம்!                                        NFPE இயக்கம் காப்போம்!

    வாழ்த்துக்களுடன் 
என்றும் ஊழியர் பணியில் 

  NFPE அஞ்சல் 
மூன்று சங்கம், 
தமிழ் மாநிலம்.



No comments:

Post a Comment