NFPE

Thursday 8 September 2016

பி.எஸ்.என்.எல்-ன் 1ரூபாய்க்கு 1ஜிபி இன்டர்நெட் : நாளை முதல் அமல்

சென்னை : ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி இன்டர்நெட் வழங்கும் திட்டம் நாளை முதல் அறிமுகப்படுத்தபடும் என்று பி.எஸ்.என்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் வியாழன்கிழமை ரூ.50-க்கு ஒரு ஜி.பி 4ஜி டேட்டாவை அறிவித்தது. இந்த நிலையில், அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். ஒரு ஜி.பி. இண்டர்நெட்டுக்கு ஒரு ரூபாய் மட்டுமே செலவாகும் புதிய பிராட்பேண்ட் சலுகை திட்டத்தை நாளை முதல் அறிமுகப்படுத்த உள்ளது.


'எக்பிரியன்ஸ் அன்லிமிட்டடு பிபி 249' என்ற திட்டத்தின் படி ,மாதந்தோறும் ரூ.249 கட்டணத்திற்கு எவ்வித வரம்பும் இல்லாமல் இணையத்திலிருந்து டவுண்லோடு செய்து கொள்ளலாம். முதல் 1 ஜி.பி-க்கு 2 எம்.பி.பி.எஸ் வேகமும் அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் இருக்கும் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தி முழுமையாக பிராட்பேண்ட் இண்டர்நெட்டை பயன்படுத்தும் போது ஒரு மாதத்தில் 300 ஜி.பி. டவுண்லோடு செய்யும் பட்சத்தில் ஒரு ஜி.பி. இண்டர்நெட் ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் கிடைக்கும் என்று பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஒரு ஜிபி-க்கான பதிவிறக்க கட்டண செலவு ரூ.1-க்கும் குறைவாகவே இருக்கும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது . ஆறு மாதத்துக்கு பிறகு, வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒரு அகண்ட அலைவரிசை திட்டத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

இந்த திட்டம் குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில்: "புதிய வாடிக்கையாளர்கள் இந்த பிபி-249 திட்டத்தை பிஎஸ்என்எல் விற்பனை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 18003451500 என்ற கட்டணமில்லா இலவச எண்ணிலும் www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்துகொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment