NFPE

Friday, 20 January 2017

சல்லிக்கட்டு ஆர்ப்பாட்டம்....

தோழர்களே! தோழியர்களே!!  
வணக்கம்.

    ச ல்லிக்கட்டுக்கு எதிரான தடை என்பது கடந்த 3 ஆண்டுகளாகவே இருந்தாலும் இந்த ஆண்டு  தமிழ் இனத்தின் பண்பாட்டுக்கு எதிராகவும், கலாச்சாரத்திற்கு எதிராகவும் உள்ள சல்லிக்கட்டுக்கான தடையை நீக்க இன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கியுள்ளது என்பது ஒரு சரித்திரமாகும். அந்த சரித்திரத்திலே  நம்முடைய பங்கு எதுவும் இல்லையே என ஏங்கிக்கொண்டிருந்த பொழுது தான் நமது சங்கங்களின் கூட்டுப்போராட்ட குழுவின் அறிவிப்பு நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. 19.01.2017 இரவு தான் PJCA தன் போராட்டத் திட்டத்தை அறிவித்தது. அஞ்சா நெஞ்சுடைய நம் அஞ்சல் தோழர்களும், தோழியர்களும் மிகப் பெருமளவில் தமிழகம் முழுவதும் கலந்துக்கொண்டது நமது உணர்விற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியே.

  நமது திருவரங்க கோட்டத்தில் ஸ்ரீரங்கம், துறையூர் மற்றும் பெரம்பலூர் தலைமை அஞ்சலகங்களில் மட்டும்மல்லாமல் மண்ணச்சநல்லூர் LSG, முசிறி LSG, தொட்டியம் LSG துணை அஞ்சலகங்களிலும், காட்டுப்புத்தூர் துணை அஞ்சலகத்திலும் மிகச் சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  நமது திருவரங்க கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் சில 

ஸ்ரீரங்கம் தலைமை அஞ்சலகம் 
துறையூர் தலைமை அஞ்சலகம் பெரம்பலூர் தலைமை அஞ்சலகம்


மண்ணச்சநல்லூர் LSG துணை அஞ்சலகம் முசிறி LSG துணை அஞ்சலகம்
தொட்டியம் LSG துணை அஞ்சலகம்காட்டுப்புத்தூர் துணை அஞ்சலகம்
NFPE, Srirangam
Dear Comrades,
  As per the call given by TN PJCA, a massive demonstration will be held at Srirangam, Turaiyur and Perambalur-HOs at 06.00 PM on 20.01.2017 for supporting Jallikkattu & also for expressing our solidarity to the agitating students. All are requested to attend without fail...NFPE & FNPO
Srirangam

Wednesday, 18 January 2017


ஜல்லிக் கட்டுக்கு அனுமதி வழங்கிட வேண்டிய மாணவர் போராட்டம், வெறும் காளைகளை அடக்கும் நிகழ்வுக்கு அனுமதி வேண்டிய போராட்டமல்ல.  இது ஒரு இனத்தின் உரிமை மறுப்புக்கு எதிரான போராட்டம். கலாச்சார உரிமை மீறலுக்கு எதிரான போராட்டம். இன மானம் காத்திட தன்னிச்சையாக வெடித்துக் கிளம்பிய போராட்டம்.  மழுங்கிக் கிடந்த இளைஞர் சமுதாயத்தை கிளர்ந்து எழுந்திடச் செய்திட்ட போராட்டம். இனி வரும் காலத்தில் கார்ப்பரேட் கொடுமைகளுக்கெதிரான போராட்டமாக, அன்னிய, பன்னாட்டு பொருளாதார ஆக்கிரமிப்புகளுக்கு  எதிரான போராட்டமாக,  இளைஞர் சமுதாயத்தை எழுச்சியுறச் செய்திட இது வழி வகுக்கும் .... வழி வகுத்திட நாம் செய்திட வேண்டும்.... நல்ல வேளையாக உள் நோக்கம் உடைய  சில தீய அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தை தங்களதாக மாற்றிட இளைஞர் சக்தி இடம் தரவில்லை. வேறு வழியில்லாமல் ஆதரவு தர வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் பட்டுள்ளது, இளைஞர் சக்திக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். அடுத்த வெற்றியும் இளைஞர்கள்  நிச்சயம் பெறுவார்கள். இந்த நெருப்பு அணையாமல் காக்கப்பட வேண்டும். பெரும் புரட்சிக்கு இதுவே மூலாதாரம். இளைஞர் எழுச்சிக்கு முழு இதரவு அளிப்போம். மறுக்கப்பட்ட உரிமை மீட்டெடுப்போம். நம் பொங்கல் விடுமுறை மறுப்புக் கெதிரான போராட்டம்  இவை அனைத்திற்குமான  அடி நெருப்பு என்பது நமக்குப்
பெருமையே ! போராடும் கரங்களை நாம் வலுப்படுத்துவோம் ! ஆங்காங்கே கிளர்ந்தெழுந்து பேராதரவளிப்போம் ! அஞ்சல் ஊழியர் போராட்ட வடிவம் ஒன்றுபட்ட அறிவிப்பாக நாளை வெளியிடப்படும் !. .... புரட்சிவாழ்த்துக்களுடன் ....   NFPE தமிழ் மாநில அஞ்சல் முன்று சங்கம்.

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இரவு முழுவதும் போராட்டம்..
போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து பகுதி இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கும்,
தபால் ஊழியர்கள் ஆதரவு...
மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தராத பட்சத்தில்,
தமிழக தபால் ஊழியர்கள் போராடத்தில் இணைவார்கள் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

போராட்டம் வெல்லட்டும்...
G.கண்ணன்,
மாநில செயலாளர் P4

Friday, 13 January 2017

Happy Pongalஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!!!

NFPE, Srirangam

Wednesday, 11 January 2017